குற்றம்

பப்ஜி மதன்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பப்ஜி மதன்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Sinekadhara

ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஆடி வந்த மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மதன் மீது ஆன்லைன் மூலமாக 159 புகார்கள் வந்தன. அதுகுறித்து சென்னை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்தது மட்டுமின்றி, ஆதரவற்றோருக்கு உதவுவதாகக் கூறி ஆன்லைனில் பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே இரண்டு முறை ஜாமீன் கேட்டு மதன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனால் அவரால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெறமுடியாது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.