குற்றம்

நகைப்பட்டறையை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

நகைப்பட்டறையை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

webteam

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைபட்டறையை உடைத்து 31 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.

செட்டி காசுக்கடை பஜாரிலுள்ள நகை பட்டறையில் நடந்த இந்த கொள்ளையில் 31 சவரன் தங்கம், 10 கிலோ வெள்ளி, 10000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையர்‌கள் திருடிச்சென்றுள்ளனர். அதனுடன் கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் உடைத்துச்சென்றுள்ளனர். நகைப் பட்டறை உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கமுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் கொள்ளையர்களின் முகம் பதிந்திருக்கிறதா என்றும், காவல் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். கொள்ளையர்கள் குறித்து விவரம் தெரிந்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.