குற்றம்

குழந்தைகளை பாதுகாப்பாக கூட்டிட்டு போங்க: அறிவுரை சொன்ன மருத்துவருக்கு அடி

குழந்தைகளை பாதுகாப்பாக கூட்டிட்டு போங்க: அறிவுரை சொன்ன மருத்துவருக்கு அடி

kaleelrahman

கோவையில் இருசக்கர வாகனத்தில் குழந்தையை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள் என அறிவுரை கூறிய மருத்துவரை அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் கணேஷ் சந்திரகலான், பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் குழந்தையை அமர வைத்து செல்போன் பேசியவாறு சென்ற நபரை கண்ட மருத்துவர் கணேஷ், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்காதீர்கள் என அறிவுரை கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மருத்துவரை தாக்கினார். மேலும், அவரது உறவினர்களும் சரமாரியாக அவரை தாக்கினர். மருத்துவர் கணேஷ் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட பாஸ்கர் என்பவரை கைது செய்தனர்.