குற்றம்

குறைந்த வட்டிக்கு லோன் வாங்கித் தருவதாக மோசடி – டெல்லியைச் சேர்ந்த இருவர் கைது

குறைந்த வட்டிக்கு லோன் வாங்கித் தருவதாக மோசடி – டெல்லியைச் சேர்ந்த இருவர் கைது

webteam

குறைந்த வட்டியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி 2,13,700 ரூபாயை ஏமாற்றியதாக டெல்லியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சைபர் கிரைம் குற்றவாளிகள், குறைந்த வட்டிக்கு லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதை நம்பிய பெண்மணி, பல தவணைகளாக 2,13,700 ரூபாயை கொடுத்து ஏமாந்துள்ளார்.

இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் இணைய குற்ற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார் ஷ உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் அறிவுறுத்தல் படியும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் (இணைய குற்றப்பிரிவு) வழிகாட்டுதலின்படியும் அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்), காவலர்கள் சுரேஷ் பாபு மற்றும் .சுதாகர் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு டெல்லி சென்றது.

இந்நிலையில், இணைய குற்ற மோசடியில் ஈடுபட்ட சதீஷ் என்ற சதீஷ்குமார் (30), ஆரியன் என்கிற ஆனந்தன் (29) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 மடிக்கணினி, 7 செல்போன்கள் மற்றும் 1,25,000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அரியலூர் அழைத்துவரப்பட்டனர். மேலும் எதிரிகள் வங்கி கணக்கில் இருந்த பணம் 58,579 ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.