குற்றம்

சென்னை: வீடியோக்களை லைக் செய்தால் பணம் என கூறி மோசடி

சென்னை: வீடியோக்களை லைக் செய்தால் பணம் என கூறி மோசடி

Sinekadhara

சென்னையில் செல்போன் செயலி மூலம் பணத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஷேர்மீ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் 30 ஆயிரம் ரூபாயை முதலில் செலுத்தினால் மாதாமாதம் 54 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் ஈட்டலாம் என்று மாதவரத்தைச் சேர்ந்த தினேஷிடம் அவரது நண்பர் கூறியிருக்கிறார். மேலும், அந்த செயலியில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லைக் கொடுத்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய தினேஷ், அந்த ஷேர்மீ செயலியில் 30 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சில நாட்கள் கழித்து அந்த செயலி வேலை செய்யாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தினேஷ், குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், செல்போன் கடை நடத்திவரும் 3 பேரைக் கைதுசெய்தனர். தலைமறைவான தமிம் அன்சாரி என்பவரை தேடி வருகின்றனர்.