மேலூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த நான்குப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யார்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர், மேலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அருகில் இருந்த பெண், அவரிடம் திருடுவதை சிலர் கண்டனர். இதையடுத்து அந்தப் பெண்ணை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில், தஞ்சாவூரைச் சேர்ந்த நாகவள்ளி என்பது தெரியவந்தது, மேலும் அப்பகுதியில் இருந்த அவர்களது கூட்டாளிகளான செல்லாயி, லதா, பிரியா ஆகிய நால்வரையும் காவல்த்துறையினர் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருமண வீடுகளில் உறவினர் போல் நடித்து நகை மற்றும் மொய் பணத்தை திருடுவது உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுப்பட்டு வருவது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.