குற்றம்

ஹாக்கி வீரரைக் குத்திக்கொன்றார் மனைவி!

ஹாக்கி வீரரைக் குத்திக்கொன்றார் மனைவி!

webteam

போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் ஹாக்கி வீரரை அவரது மனைவி சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.

மும்பை மலாடு பகுதியில் வசித்து வந்தவர் அபையா சென்னடா. வயது 52. முன்னாள் ஹாக்கி வீரரான இவர், ஏர் இந்தியா, டாடா, மும்பை ஹாக்கி அணிகளுக்காக பல ஆண்டுகளாக விளையாடி இருக்கிறார். இவரது இரண்டாவது மனைவி அமிதா. அபையாவுக்கு கணபதி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் கணபதி அவரின் முதல் மனைவிக்கு பிறந்தவர். நேற்று மதியம் குழந்தைகள் வீட்டில் இல்லாததால், அபையாவும் அமிதாவும் மது குடித்தனர். போதை அதிகமாகியதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கோபமாக மாறியது. டென்ஷன் ஆன அமிதா, சமையலறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து அபையாவை சரிமாரியாகக் குத்தினார். இதில் நிலைதடுமாறிய அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதில் அமிதாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபையா இறந்தார். அமிதாவுக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. 


கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு நடக்கும் என்றும் கோபம் அதிகமானதால் அமிதா இப்படி நடந்துகொண்டார் என்றும் தெரிவித்தனர்.