திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல்லூரி மாணவியைக் கொலை செய்த இளைஞரின் வீட்டை இன்று காலை அடித்து உடைத்த மாணவியின் உறவினர்கள், தீ வைத்தும் கொளுத்தினர்.
புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோகுல்நாத் என்பவர் கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதனால் ஆத்திரமடைந்த கோகுல்நாத் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போளூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இன்று காலை மாணவியின் உறவினர்கள் 30 பேர் கோபிநாத்தின் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்து விட்டு இருசக்கர வாகனம் மற்றும் வீட்டுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் குறித்து களம்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.