குற்றம்

கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை.. வீடியோ எடுத்த பொதுமக்கள்!

JustinDurai

ராஜஸ்தானில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா ரீகர் (32) என்ற பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறுத்த கும்பல் ஒன்று அனிதாவைச் சூழ்ந்து தாக்கி உள்ளனர்.  அதோடு நிற்காமல் அந்த நபர்கள், பெட்ரோல் ஊற்றி அனிதாவை உயிருடன் எரித்துள்ளனர்.

சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் அதனை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதையடுத்து 70 சதவிகித தீக்காயங்களுடன் அனிதா மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்த கொடூரமான சம்பவம்  குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடுத்த கடனை அனிதா திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.   

அண்மையில் ராஜஸ்தானில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் அடித்து பட்டியலின மாணவர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆசிரியை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்