Family Of 7 That Died By ends their life In Car Left These Final Words PT
குற்றம்

ஹரியானா | ”அடுத்த 5 நிமிடத்தில் செத்துடுவோம்” ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு

பூட்டிக்கிடந்த காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே காரில் அவர்கள் எழுதி வைத்துச் சென்ற கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது..அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் தான் பலரையும் சோகத்தில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

PT WEB

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் மிட்டல். இவர் தனது பெற்றோர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் காரில் மயங்கி கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார் கதவை உடைத்து மயங்கி கிடந்த 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் 7 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், சடலங்கள் காரில் இருந்து மீட்கப்பட்ட போது, கடிதம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.அந்த கடிதத்தில் அதிகளவு கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக விஷம் குடித்து 7 பெரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.