குற்றம்

நான் லஞ்ச ஒழிப்புதுறை ஏ.டி.எஸ்.பி ! சார் பதிவாளரையே ஏமாற்றிய கும்பல்..

நான் லஞ்ச ஒழிப்புதுறை ஏ.டி.எஸ்.பி ! சார் பதிவாளரையே ஏமாற்றிய கும்பல்..

webteam

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சார் பதிவாளர் இந்துமதியிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சார் பதிவாளர் இந்துமதியை நேற்று மாலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனது பெயர் விஸ்வநாதன் என்றும், தான் சென்னை லஞ்ச ஒழிப்புதுறை ஏ.டி.எஸ்.பியாக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், சிறப்பு தனிப்படை மூலம் நாமக்கல் மாவட்டத்தை கண்காணித்து வருவதாகவும், அதற்காக தனியார் வாகனங்களை பயன்படுத்துவதால், தான் அனுப்பும் நபரிடம் 5ஆயிரம் ரூபாய் பணம்‌கொடுத்தனுப்பும்படி கூறியுள்ளார். சந்தேகத்தின் பேரில் இந்துமதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அங்குவந்த காவல்துறையினர் சார்பதிவாளர் அலுவலத்தில் பணத்திற்காக காத்திருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், சேலத்தைச் சேர்ந்த பாஸ்கர் அவரது நண்பர் யூனஸ் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.