குற்றம்

போலி பாஸ்போர்ட் மூலம் சிறுவர்களை அழைத்துச் சென்ற பெண் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் சிறுவர்களை அழைத்துச் சென்ற பெண் கைது

webteam

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்ற மஞ்சு தத்தா என்ற பெண்ணை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று மோசடி செய்வதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இது தொடர்பாக 2 விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மற்றும் தமிழ்மாறன், பிரசாத் என்ற 9 தரகர்களை ஏற்கனவே சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சு தத்தா (57) என்ற பெண்ணை மும்பையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சு தத்தா லண்டனிலிருந்து மும்பை வந்துள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து மும்பை சென்ற மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், சர்வதேச போலீஸ் உதவியுடன் மஞ்சு தத்தாவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின் அவரை சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.