குற்றம்

கார் மோதிய விபத்து: முன்னாள் இந்திய வீரர் கைது

கார் மோதிய விபத்து: முன்னாள் இந்திய வீரர் கைது

JustinDurai

காரை இடித்து விபத்து ஏற்படுத்திவிட்டு தகராறில் ஈடுபட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, மும்பையில் உள்ள பாந்த்ரா என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் குடியிருப்பு வளாகத்திற்குள் காரில் வந்தபோது அங்கு இருந்த இரும்பு கேட் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தினார். இதுகுறித்து கேட்ட குடியிருப்பு காவலாளியுடன் தகராறில் ஈடுபட்டார். காவலாளிக்கு ஆதரவாக பேசிய சில குடியிருப்புவாசிகளுடனும் சண்டையிட்டார்.

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காரை அதிவேகமாக ஓட்டுதல் பிறர் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் அலட்சியத்தால் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காம்ப்ளி மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிக்கலாம்: வழிப்பறி வழக்கில் கைதானவர்கள் மீது பாய்ந்த கடுமையான சட்டம்