குற்றம்

காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை ! 4 பேர் கைது

காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை ! 4 பேர் கைது

webteam

16 வயது பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் காதலர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலர் உள்ளிட்ட 4 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக ராமலிங்கம், சுரேஷ்குமார், அழகுராஜ், ராமச்சந்திரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பு இருப்பது தெரிந்ததால் காதலை முறித்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி எசக்கியம்மன் கோவில் செல்லலாம் என்று அப்பெண்ணை காதலர் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரத்தில் அவரது நண்பர்கள் 3 பேரும் இணைந்துள்ளனர். சந்தேகமடைந்த அந்தப்பெண் அந்த இடத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

மீண்டும் கடந்த வியாழக்கிழமை அந்தப் பெண்ணை தொடர்புகொண்ட முன்னாள் காதலர், நடந்த செயலுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கோரி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். யாருமில்லாத இடத்துக்கு அழைத்து வந்த பிறகு, அந்த பெண்ணை 4 பேரும்  கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. வீட்டுக்கு வந்த அப்பெண் நடந்தவற்றை குடும்பத்தாரிடம் தெரிவிக்கவே,இது தொடர்பாக அப்பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்துள்ளனர்