செய்தியாளர்: ரா.மணிகண்டன்
சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான், திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்தில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஈரோடு அருகே நசியனூரில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன் சிவக்குமார் மற்றும் பெரியசாமி ஆகிய ஐந்து பேரிடம் சித்தோடு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இக்கொலை சம்பவத்தில், ஏற்கனவே சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோரை சுட்டுப் பிடித்த காவல் துறையினர், கார்த்தி உள்பட நால்வரை கைது செய்துள்ளனர். மேலும் ஜீவகன், சலீம் மற்றும் கோகுல சுகவனேஷ்வரன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.