பொறியாளர் கைது  pt desk
குற்றம்

ஈரோடு | சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த பொறியாளர் கைது

ஈரோட்டில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த பொறியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த (16 வயது) சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது குறித்து அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து சிறுமியின் படத்தை பதிவேற்றிய நபர் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Arrested

அப்போது கோவையில் செயல்பட்டு வரும் ஹைட்ராலிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி பொறியாளராக பணிபுரிந்து வந்த சுரேந்தர் (24) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுரேந்தரை பிடித்து அவர் மீது போக்சோ, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.