போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது pt desk
குற்றம்

ஈரோடு | ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

ஈரோடு அருகே போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரை கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர், அவரிடம் இருந்து 15 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நோட்டமிட்டு நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜோன்ஸ்(44) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் பவுடர் வகையில் இருந்த பொருளையும் கைப்பற்றினர்.

Arrested

இதையடுத்து காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சாவை திருப்பூரில் இருந்து பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் பதுக்கி வைத்திருந்த 15.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 151 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.

மேலும் 1.200 கிலோ கஞ்சா மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். ஜவுளி வியாபாரம் செய்து வந்து தற்போது போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.