Accused
Accused pt desk
குற்றம்

ஈரோடு: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி - தலைமறைவாக இருந்த பெண் ஜோதிடர் கைது

webteam

செய்தியாளர்: J.மணி

ஈரோடு மாவட்டம் ஒரிச்சேரி புதூர் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் பூவழகன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அய்யன்காட்டை சேர்ந்த ஜோதிடர் தம்பதியினரான அன்பானந்தன் மற்றும் கோகிலா (எ) கோகிலாம்மாள் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Police station

இந்நிலையில், ஜோதிடத்தால் தமிழகத்தில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தங்களுக்கு செல்வாக்கு உள்ளது என ஜோதிட தம்பதியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது மகளுக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்து அரசு செவிலியர் வேலை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதை உண்மையென நம்பிய பூவழகனுக்கு 10 லட்சத்திற்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அன்பானந்தன் சில வருடங்களாக வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அன்பானந்தனிடம் பணத்தை திருப்பிக் கேட்க அவர், ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துள்ளது. இதனையடுத்து அன்பானந்தன் - கோகிலா (எ) கோகிலாம்மாள் குறித்து விசாரணை செய்துள்ளார்.

Arrested

அப்போது தம்பதியினர் இதேபோன்று மலர்கொடி மற்றும் ஈஸ்வரி ஆகியோரின் மகன்களுக்கு வேலை வாங்கித் தருவதாக முறையே 5 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து பூவழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அன்பானந்தன் அவரது மகள் தற்காலிக செவிலியரான பவித்ரா ஆகியோரை ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த கோகிலாம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.