கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது pt desk
குற்றம்

ஈரோடு | கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது – 33 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 3.30 லட்சம் மதிப்புள்ள 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஈங்கூர் பாலத்தின் கீழே கஞ்சாவை விற்பனை செய்த மூவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சூரஸ்குமார், முகேஷ் டிகல் மற்றும் அருண் டிகல் என்பது தெரியவந்தது.

இவர்கள் மூவரும் ஈங்கூரில் உள்ள ஆயில் மில்லில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் ஒடிசாவில் இருந்து ஈங்கூருக்கு வரும் போது கஞ்சா கடத்தி வந்து அவற்றை பிரித்து விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3.30 லட்சம் மதிப்புள்ள 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.