செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு பழையபாளையம் அடுத்த சுத்தானந்தன் நகரில் வசித்து வரும் ஓட்டுநர் தினேஷ் இருதயராஜ் (37) குட்கா பொருட்களை மளிகை கடைகளுக்கு விற்பனை செய்வதாக மதுவிலக்கு மற்றும் உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்று தினேஷ் இருதயராஜை, மதுவிலக்கு காவல்துறையினர் பின்தொடர்ந்து வந்தனர்.
இதையடுத்து அவரின் வீட்டிற்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களை உணவு பாதுகாப்புத் துறை, மதுவிலக்கு மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில், சுமார் 211 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் மூன்று கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், தினேஷ ;இருதயராஜிடம் தெற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கர்நாடகவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்துவந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.