குற்றம்

சட்டவிரோதமாக பத்திரிக்கைகளை இணையத்தில் வெளியிட்ட பொறியாளர் கைது

சட்டவிரோதமாக பத்திரிக்கைகளை இணையத்தில் வெளியிட்ட பொறியாளர் கைது

webteam

பிரபல பத்திரிக்கைகள், நாளிதழ்கள், பத்திரிகை செய்திகளை பிடிஎப்-ஆக மாற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பொறியாளர் சைபர் கிரைம் போலீசார் கைது
செய்தனர். 

நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் செய்திகள் புத்தக வடிவிலேயே பிடிஎப் பைலாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. முறையான அனுமதி பெறாமல்
திருட்டுத்தனமாக செய்திகள் வெளியானதால், வார இதழ்களின் விற்பனை குறைந்தன. அதைத் தொடர்ந்து வார இதழ்களின் நிர்வாகிகள் சிலர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் அன்பரசு தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். சமூக
வலைதளங்களில் வந்த பிடிஎப் பைல்கள் யார் மூலம் அனுப்பப்படுகின்றன என்பதை போலீஸார் ஆய்வு செய்தததில் magnet.com என்ற இணையதள முகவரியில்
இருந்து அனுப்பப்படுவது தெரிந்தது. மேக்னெட் டாட் காமை தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்தி வருவது தொடர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக
பணிபுரிகிறார். நாளிதழ் மற்றும் வார இதழ்களின் இணையதளத்துக்குள் சென்று முறையான அனுமதியில்லாமல் செய்திகளைத் திருடி, பிடிஎப் பைலாக மாற்றி, சமூக
வலைதளங்களில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், நஷ்டத்தை உண்டாக்குதல் போன்ற
பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.