சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கி செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல பயணிகள் அரக்கோணம் மார்கமாக செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்பொழுது ரயில் நிலையத்திற்கு போதையில் வந்த இளைஞர்கள் சிலர் இரயில் நடைமேடையில் இருந்த இரும்பு ராடு, பழுப்பு, டியுப் லைட் உள்ளிட்டவற்றை பிடிங்கி நடைமேடையில் ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை பெரியவர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இரும்பு கம்பியால் முதியவர் பரமசிவத்தை தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பயணிகளிடையே அச்சம் எழுந்துள்ளது.
போதை இளைஞர்கள் பொதுமக்களை தாக்கி அட்டூழியம் செய்யும் செல்போன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.