குற்றம்

கள்ளக்காதலில் டாக்டர்: சிக்க வைத்தார் மனைவி!

கள்ளக்காதலில் டாக்டர்: சிக்க வைத்தார் மனைவி!

webteam

ஆந்திர மாநிலம் சித்தூரில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை, மனைவியே கையும்‌ களவுமாக காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் ரமேஷ். அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், ரம்யா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதே பகுதியை சேர்ந்த புவனேஷ்வரி என்ற பெண், அடிக்கடி சுகாதார மையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரமேஷூடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக் காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனால் ரமேஷ் வீட்டுக்கு சரியாக வரவில்லை. தும்பகுப்பம் கிராமத்தில் உள்ள புவனேஷ்வரி வீட்டிலேயே தங்கி இருந்தார். 
மனைவி ரம்யாவின் நகைகள், அவரிடம் இருந்த பணம் ஆகியவற்றையும் வாங்கி சென்ற  ரமேஷ், அவற்றை கள்ளகாதலிக்குக் கொடுத்தார். 

மன வேதனை அடைந்த ரம்யா, பங்காருபாளையம் காவல் நிலையத்தில் கணவரின் நடவடிக்கை குறித்து புகார் செய்தார். போலீசார் புவனேஷ்வரி வீட்டுக்கு சென்று இருவரையும் கைது செய்தனர். இரண்டு பேரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றிய போது ரம்யா, கணவர் ரமேஷை திடீரென்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.