குற்றம்

முதியோர்களின் கவனத்தை திசை திருப்பி கைவரிசை - வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

முதியோர்களின் கவனத்தை திசை திருப்பி கைவரிசை - வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

கலிலுல்லா

புதுக்கோட்டையில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க செல்லும் முதியோர்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலையிடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த ஒன்றாம் தேதி ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவர் பணம் எடுத்துவிட்டு திரும்புகையில் அவரது கவனத்தை திசை திருப்பி வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் வேறு கார்டை கொடுத்துள்ளனர். கண்ணனின் ஏடிஎம் கார்டை வைத்து நகைகளை அந்த கும்பல் வாங்கியுள்ளனர். இதே போன்று, அந்த கும்பல் 3 முதியவர்களிடம் இருந்து லட்ச கணக்கில் பணத்தை திருடியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தை பெஹருலால் சஹானி, சுனில் ஷா, அரவிந்த் கஹானி ஆகிய மூன்று பேர் ஆயுதப்படை மைதானம் அருகேயுள்ள ஏடிஎம் மையத்தில் மோசடி வேலையில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.