குற்றம்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

webteam

ஆந்திராவில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாற்றுத்திறனாளி பெண் (வயது 21) ஒருவர் மூன்று சக்கர வாகனத்தில் தனது சகோதரி இல்லத்திற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் சரியாக வழித்தெரியாததால் அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் விலாசம் கேட்டுள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு  ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணிடம் தவறான வழியை கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவ்வழியாக சென்றுள்ளார். இதற்கிடையில் தனது இரு நண்பர்களை அழைத்துக்கொண்டு அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் அந்தப் பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். ஆட்கள் நடமாட்டம்  இல்லாத இடத்தில் அந்த பெண்ணை மறித்த அந்த கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அந்தப்பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் மீட்டு அவரது சகோதரியின் இல்லத்தில் பாதுகாப்பாக விட்டு சென்றனர். அப்பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.