இளைஞர் கைது pt desk
குற்றம்

திண்டுக்கல் | குறி சொல்வதாகக் கூறி பேச்சுக் கொடுத்த இளைஞர்.. மயங்கி விழுந்த பெண்.. மாயமான நகைகள்!

ஆடலூரில் குறி செல்வதாகக் கூறி பெண்ணிடம் நகையை பறித்த இளைஞரை பிடித்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆடலூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (42). இவர், வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், குறி சொல்வதாகக் கூறி பேச்சுக் கொடுத்துள்ளார். இதையடுத்து சற்று நேரத்தில் கவிதா மயங்கிய நிலையில், தான் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை அந்த இளைஞரிடம்; கொடுத்துள்ளார்.

Arrested

இதையடுத்து அநத இளைஞர் வெளியேறிய சற்று நேரத்தில் அங்கு வந்த அந்தப் பெண்ணின் கணவர் சரவணன் சம்பவம் குறித்து கேட்டறிந்து அப்பகுதியினர் உதவியுடன் சம்பந்தப்பட்ட இளைஞரை துரத்திச் சென்று தர்மத்துப்பட்டி அருகே மடக்கிப் பிடித்து கன்னிவாடி போலீசில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து கன்னிவாடி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர் மடத்துக்குளத்தைச் சேர்ந்த சூர்யா (27) என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து டூவீலர், தங்க டாலர் மற்றும் வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.