செய்தியாளர்: திவ்யஸ்வேகா
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கேத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55) இவர், நவாமரத்துப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வழி கேட்பது போல் நடித்து பாப்பாத்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி பவித்ரா மேற்பார்வையில், வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் கோணப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (45), சாணார்பட்டி கொசவபட்டியைச் சேர்ந்த அருமைராஜ் (45) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டு விசாரித்து வருகின்றனர்