கொசவப்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 480 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள கொசவபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுங்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து எஸ்.பி தனிப்படை போலீசார் கொசவபட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர். அதில் குடோனில் விற்பனைக்காக பதுக்ககி வைக்கப்பட்டிருந்த 480 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் ஆர்.எம் காலனியைச் சேர்ந்த மணிகண்டன், வேடசந்தூர் மாரம்பாடியைச் சேர்ந்த சத்யா இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், பெங்களூரிலிருந்து கார் மூலம் குட்கா கடத்தி வந்து கொசவப்பட்டியில் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து சாணார்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த சாணார்பட்டி போலீசார், அவர்களை கைது செய்து மஞ்சநாயக்கம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.