கோயில் பூசாரி போக்சோவில் கைது pt desk
குற்றம்

தருமபுரி | சிறுமிக்கு பாலியல் தொல்லை - கோயில் பூசாரி போக்சோவில் கைது

தருமபுரி அருகே சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்த பூசாரியை போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி அருகே 16 வயது சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு எந்தவித பிரச்ணையும் இல்லை என தெரிவித்துள்ளனர். அதனையடுத்து கோயில் பூசாரி தண்டபாணி (32) என்பவர் மாந்திரீகம் செய்து குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கைது

இந்நிலையில், பெற்றோருடன் சென்ற சிறுமியை தனிமையில் பூஜை செய்ய வேண்டும் எனக் கூறிய பூசாரி, பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பூசாரி தண்டபாணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.