செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு சொகுசு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 1-டன் குட்கா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா (22) என்பதும், இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்க்கு குட்காவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் மகேந்திராவை கைது செய்து, சொகுசு காருடன், குட்காவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடததி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.