குற்றம்

17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி... சிறையில் அடைப்பு...

17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி... சிறையில் அடைப்பு...

kaleelrahman

ஆம்பூர் அருகே 17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்த இளைஞரை உமராபாத் போலீசார் கைது செய்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து பைரப்பல்லி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரது 17 வயது மகள் அவர் வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் அருகில் இருந்த வீட்டு மாடியில் இருந்து, சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.


அதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து உமராபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சிறுமியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்து தனுஷ்குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்