செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (40). ஓட்டுநராக வேலை பார்க்கும் இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், தருமபுரி அருகே 3 சிறுமிகளின் பெற்றோர்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், பெருமாள் என்பவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளனர். புகார் குறித்து காவல் துறையினர் பெருமாள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.