பாலியல் தொழிலில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண்கள் 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் பாண்டவா நகரில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து சஷி கார்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஓட்டல் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதற்காக போலியாக, ஒருவரை வாடிக்கையாளர் போன்று ஓட்டலுக்கு உள்ளே அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பெண்கள் சிக்கினர். இதேபோன்று, பிரவீன் குமார் மற்றும் கேத்தன் கன்சால் ஆகிய 2 புரோக்கர்களையும் போலீசார் பிடித்தனர். கைதான 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: “வாயை திறக்கக் கூடாது” - ஜெய்ப்பூர் மசாஜ் சென்டரில் நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை!