பாலியல் வன்கொடுமையால் 38 வயது பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரப்பிரதேசம் ஜொல்லா கிராமத்தில் 38 வயது பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், எழுதிய கடிதம் ஒன்று அங்கிருந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் தான் ஒரு தலித் பெண் என்றும், தன்னை இரண்டு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், எழுதப்பட்டிருந்தது. அத்துடன் ‘நான் இனி வாழமாட்டேன். அந்த 2 பேரையும் விடாதீங்க’ என்றும் போலீஸாருக்கு கோரிக்கை விடுக்கபட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் இருந்த தகவலின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.