கடலூர்
கடலூர்  PT Desk
குற்றம்

வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உயிரிழப்பு; குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்! #Video

PT WEB

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உயிரிழந்ததால் குற்றம் சாட்டப்பட்டவரின் வீடு மீது பெண்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 14 வயது சிறுமியை அவரது சித்தப்பாவே வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

திட்டக்குடி வன்கொடுமை, கடலூர்

வன்கொடுமை சம்பவத்துக்குப்பின், தற்கொலைக்கு முயன்றுள்ளார் சிறுமி. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் முன்பு பெண்கள் பலர் மறியலில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டின் மீது கற்களை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் மக்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

(இச்செய்தியை, இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் காணலாம்)

(குறிப்பு: போக்சோ குற்றங்கள் மீது கடுமையான தண்டனை எடுக்கப்பட வேண்டும் என்பது போலவே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்)