செய்தியாளர்: பிரவீண்
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது நண்பர் சந்திரசேகர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் டாஸ்மாக் பாரில் அமர்ந்து மது அருந்திய போது வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவில், முதல்வர் குறித்தும், தி.மு.க எம்.பி கனிமொழி குறித்தும், துணை முதல்வர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசும் காட்சிகள் இருந்தது. இதனை பார்த்த தி.மு.க ஐ.டி விங் பொறுப்பாளர் சக்திவேல் என்பவர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து சிவாவையும், அவரது நண்பர் சந்திரசேகரனையும் காவல் துறையினர் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.