செய்தியாளர்: ஐஸ்வர்யா
கோவை ஈச்சனாரி பகுதியில் சுந்தராபுரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், இரண்டு கார்களிலும் அதிக அளவிலான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (38), குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (32) ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 560 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.