accused
accused pt desk
குற்றம்

மதுரை: காமெடி நடிகருக்கு மனனவியால் நேர்ந்த சோகம்: பாஜகவினரை வைத்து கால்களை உடைத்ததாக புகார்!

Kaleel Rahman, webteam

மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேசன் ஆறுமுகம் (50). இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது மதுரையில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி அதன்மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பாஜகவுக்கு எதிராகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடிக்கு ஆகியோருக்கு எதிரான கருத்துகளை முகநூலில் பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து காமெடி நடிகர் வெங்கடேசுக்கு, கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது மனைவி பானுமதிக்கு தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதைக் கண்டித்து வந்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

comedy actor

இந்நிலையில் வெங்கடேஷ், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதால் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கணவர் மீதான கோபத்தில் பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுநராக பணியாற்றிய மோகன் என்பரிடம் வெங்கடேஷின் காலை உடைத்து வீட்டிலேயே இருக்க வைக்க ஆலோசனை கேட்டுள்ளார்.

இதையடுத்து ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்த நிலையில், கால்களை உடைக்க ராஜ்குமார் ஒரு லட்சம் கேட்டதால், பாஜகவில் பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் உறவினரான வைரமுத்து என்பவரிடம் பானுமதி உதவி கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் பாஜக பற்றி தவறாக பதிவிட்ட வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

பாஜகவைச் சேர்ந்த 28 வது வார்டு மண்டல தலைவர் மலைசாமி, பாஜக கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ், வைரமுத்து ஆகியோர் கடந்த ஜூன் 15 ஆம் தேதி இரவு நாகனாகுளம் அருகே வைத்து வெங்கடேஷின் இரு கால்களையும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர்.

wife

இதைத் தொடர்ந்து வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுதது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து பீ.பீகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வெங்கடேஷ் தல்லாகுளம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வெங்கடேஷின் மனைவி பானுமதி (48), ராஜ்குமார் (37), மோகன் (40) வைரமுத்து (38) மலைசாமி (35) ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தானர். மேலும் தலைமறைவாக இருக்கும் துளசி என்பவரை தேடி வருகின்றனர்.