பெயிண்ட்டர் கைது pt desk
குற்றம்

கோவை: வேலைக்குச் சென்ற வீட்டில் நகைகளை திருடியதாக பெயிண்ட்டர் கைது

சூலூர் அருகே பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்ற வீட்டில், தங்க நகைகளை திருடியதாக நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

கோவை நடுப்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் கடந்த மாதம் தன் வீட்டிற்கு சகாயராஜ் என்பவர் மூலம் பெயிண்ட் வேலை செய்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம், கம்மல் உட்பட 3 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

தங்க நகை பறிமுதல்

இதையடுத்து சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கொள்ளை நடந்த வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சகாயராஜ் (30) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் 3 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.