செய்தியாளர்: சுதீஷ்
கோவை வனச்சரகம் காந்திபுரம், ராம்நகர் ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் வந்த கிருபா, சதீஷ்குமார், விஜயன், கௌதம், மாரியப்பன் ஆகியோர் ஷ மேட்டூரில் இருந்து கோவைக்கு யானை தந்தம் சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களை விற்க முயன்றுள்ளனர்.
அப்போது, கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் வனவர் மற்றும் வனப்பணியாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து வன உயிரின பொருட்களை கைப்பற்றனர். பின்னர் வன குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 முன்பாக ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.