கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவர் கைது pt desk
குற்றம்

கோவை: கஞ்சா செடியை வளர்த்ததாக ஒருவர் கைது – போலீசார் விசாரணை

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா செடியை வளர்த்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி புதூர் விநாயகர் கோயில் பின்புறம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் நான்கரை அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்ந்து இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

கஞ்சா செடி

இதனை அடுத்து அந்த கஞ்சா செடியை வளர்த்தாக தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை பூர்வீகமாக கொண்ட ரபீக் (41) என்பவரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், ரபீக்கை சிறையில் அடைத்தனர். இதனல் அங்கு பரபரப்பு நிலவியது.