குற்றம்

கடத்தப்பட்ட 10 மாத குழந்தை சில மணி நேரங்களில் மீட்பு

கடத்தப்பட்ட 10 மாத குழந்தை சில மணி நேரங்களில் மீட்பு

rajakannan

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை எதிரில் இருக்கும் பஜார் ரோட்டில் கடத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 

ஆனந்தன் மற்றும் லதா தம்பதியினரின் மகனான 10 மாத குழந்தை அகிலன், தாத்தா அருகே படுத்திருக்கும்போது நேற்றிரவு கடத்தப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அகிலனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பூக்கடை போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர். மேலும் புகார் சம்மந்தமாக ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலை என்பவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கண்ணகி நகரில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையைக் கடத்தியதாக சபியா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட குறுகிய நேரத்தில் குழந்தையை மீட்ட பூக்கடை காவல் நிலைய காவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.