ரூ.74 லட்சம் மோசடி – ஒருவர் கைது pt desk
குற்றம்

சென்னை | போலி ஆவணங்கள் மூலம் ரூ.74 லட்சம் மோசடி – ஒருவர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.60 லட்சம் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 14 லட்சம் என மொத்தமாக சுமார் 74 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான நபர்களை தேடிவருகின்றனர்.

ஜெ.அன்பரசன்

சென்னை ஈகோர்ட் தாங்கள் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் மேலாளர் சுகன்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலக மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2019ம் ஆண்டு மேற்கண்ட வங்கியில் Sonex Builders உரிமையாளர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை விற்பனை செய்துள்ளனர். இதை மறைத்து, கதவு எண்களை மாற்றி, போலியான ஆவணங்கள் தயார் செய்து ரூ.60 லட்சம் கடன் பெற்றுள்ளனர். கடனை திரும்பிச் செலுத்தாமல் ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

Arrested

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு பங்கு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு Sonex Builders Partner-ஆன தேர்விஜயன் (63) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீடு வாங்குபவர்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்து வங்கியில் சமர்பித்து வீட்டு கடன் பெற்று அதை வங்கிக்கு திரும்பச் செலுத்தாமல் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் வங்கி மற்றும் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து சட்டவிரோதமாக ரூ.73,77,416 பணம் சுயலாபம் அடைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தேர்விஜயன் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைவராக உள்ள மற்ற மோசடிக்காரர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.