குற்றம்

சென்னை: ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல்

Veeramani

சென்னையில் ரயிலில் கடத்திவரப்பட்ட நான்கு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, மின்னணுப் பொருட்களை சரக்கு ரயிலில் கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, நான்கு டன்னுக்கும் அதிகமான குட்காவை ரயிலில் கடத்தியது தெரிய வந்தது. மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மின்னணுப் பொருட்களும் இருந்தன.

அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்ற போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மின்சாதனப் பொருட்களுக்கு உரிய ஆவணம் அளித்தால், திருப்பி ஒப்படைக்கப்படும் என வணிகவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.