சென்னை நீலாங்கரையில் இன்று அதிகாலை தன் வீட்டின் முதல்தளத்தில் திருட்டு நடப்பதாக ஒரு பெண் அவசர எண் 100 மூலமாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அடுத்து மூன்று நிமிடத்தில் ரோந்து காவலர்கள் அவ்விடத்திற்கு விரைந்துசென்று திருடர்களை பிடித்துள்ளனர்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அடையாறு காவல்துறை துணை ஆணையாளர் “ இன்று அதிகாலை 2 அளவில் அவசர உதவி எண் 100 க்கு நீலாங்கரையில் இருந்து ஒரு பெண், 2 திருடர்கள் தனது வீட்டின் முதல் தளத்தில் திருடுவதாக தகவல் தெரிவித்தார். இந்த தகவல் கிடைத்த 3 நிமிடத்தில் ரோந்து வாகனங்கள் அங்கு சென்று திருடியவர்களை பிடித்து அசம்பாவிதம் ஏற்படாதவாறு காத்தனர்” என்று தெரிவித்துள்ளார்