குற்றம்

சென்னை: குடிபோதையில் ஏற்பட்ட தகராறு – ஒருவர் வெட்டிக் கொலை

சென்னை: குடிபோதையில் ஏற்பட்ட தகராறு – ஒருவர் வெட்டிக் கொலை

PT

சென்னையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஜார் கார்த்திக். இவர் தமது நண்பரான மதன் உள்ளிட்ட மேலும் 4 பேருடன் பீவி காலனியில் உள்ள சுடுகாட்டில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அப்போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மதன் தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து பஜார் கார்த்திக்கை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த செம்பியம் காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 5 பேரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.