வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது pt desk
குற்றம்

சென்னை | ஏடிஎம்-ல் நூதன கொள்ளை முயற்சி – வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

திருவான்மியூரில் ஏடிஎம்-ல் நூதன முறையில் திருட முயன்ற உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர். ஏடிஎம்-ல் கருப்பு அட்டை பொருத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் வெளியே வரும் பகுதியில் கருப்பு நிற அட்டையை வைத்து நூதன முறையில் திருட முயற்சி செய்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கைது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் (26), பிரிட்ஜ் பான் (30), ஸ்மித் யாதவ் (33), ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏடிஎம் மையங்களில் கைவரிசை காட்டும் இந்த கும்பல், திருவான்மியூர் ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு அட்டையை வைத்துள்ளனர். அதன் பிறகு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்த பின்னரும் பணம் வராததால் இயந்திரக் கோளாறு என நினைத்துக் கொண்டு தனது ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி தலைமை இடத்தில் இருந்து, திருவான்மியூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் மர்ம நபர்கள் சிலர் இயந்திரக் கோளாறை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். என அலர்ட் செய்துள்ளனர். இதையடுத்து தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் வந்து பார்த்தபோது, கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கருப்பு அட்டையை வைத்து இயந்திரத்தில் கோளாறு ஏற்படுத்தி விட்டு சென்ற தெரியவந்தது.

arrested

அதன் அடிப்படையில் திருவான்மியூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.