குற்றம்

சென்னை: முன்விரோதத்தால் கொலை செய்யும் நோக்கில் ஆயுதத்துடன் சுற்றித் திரிந்த நபர் கைது

சென்னை: முன்விரோதத்தால் கொலை செய்யும் நோக்கில் ஆயுதத்துடன் சுற்றித் திரிந்த நபர் கைது

kaleelrahman

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவரை கொலை செய்யும் நோக்குடன் சுற்றித் திரிந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அர்னால்டு சாமுவேல். இவருக்கும் பாபுகான் (24), என்ற நபருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் சிறையில் இருந்து நிபந்தனை பிணையில் வெளியே வந்த அர்னால்ட் சாமுவேல், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில், கையொப்பமிட வந்தார். அப்போது, பாபுகான் அவரை கொலை செய்ய முயன்று அன்றே சிறைக்கும் சென்றார்.

இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, அர்னால்டு சாமுவேலை கொலை செய்யும் நோக்கத்தோடு பாபுகான் அரிவாளுடன் சுற்றித்திரிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் சீனிவாசன், பாபுகானை கைது செய்து அவரிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

கொலை செய்யும் முயற்சியை தடுத்து நிறுத்தி பாபுகானை கைது செய்த காவல் ஆய்வாளர் சீனிவாசனை, தாம்பரம் காவல் ஆணையர் ரவி பாராட்டினார்.