சென்னை அம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த குட்கா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
அயப்பாக்கத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்ப முயன்றதாக தெரிகிறது.
உடனே அந்த நபரை மடக்கி பிடித்த காவல் துறையினர், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், குட்கா இருப்பது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் அவர், அம்பத்தூரை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 26 கிலோ எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.