குற்றம்

சென்னை: காதல் ஜோடிகளை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாக போலி போலீஸ் கைது

சென்னை: காதல் ஜோடிகளை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றதாக போலி போலீஸ் கைது

kaleelrahman

போலீஸ் என மிரட்டி காதல் ஜோடிகளிடம் நகைகளை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவராமன் (40), என்பவர் தான் ஒரு போலீஸ் எனக்கூறி தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகளை மிரட்டி தங்க நகை மற்றும் பணத்தை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு மர்ம நபரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் மீது 41 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவரிடமிருந்து 25 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.